யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளவெட்டி தெற்கு பகுதியினைச் சேர்ந்த சிறில் ரவிநேசன் (வயது-36) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய குறித்த கிராமசேவையாளர் பலாலி வடக்கு விடுவிக்கப்பட்ட காலம் தொடக்கம் கடந்த வருடம் வரை மீள்குடியேறிய மக்களின் மீள்வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 21ம் திகதி தலையிடி காய்ச்சல் காரமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 23ம் திகதி மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் கிராமசேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மூளைக்காய்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.