யாழ்ப்பாணத்தில் தீ விபத்தொன்றில் படுகாயமடைந்திருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குப்பை கொழுத்திய போது ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜீவரட்ணம் யாழினி (வயது-21) என்ற இளம் யுவதி படுகாயமடைந்திருந்தார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி வீட்டில் குப்பை கொளுத்த முயன்றுள்ளார். எனினும் அது எரியவில்லை என வர்ணப்பூச்சுக்காக வைக்கப்பட்டிருந்த ரின்னரை ஊற்றியுள்ளார்.
இதன்போது அவரது சட்டையில் தீப்பற்றியது. படுகாயமடைந்த அவரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.