வவுனியா விபத்து! வாகனத்துடன் சேர்த்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சாரதி? (படங்கள்)

கொழும்பிலிருந்து யாழ்.பருத்தித்துறை நோக்கிப் பயணித்த பேருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வானும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இச் சம்பவம் வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்றது.

இந் நிலையில் இவ் விபத்தின் பின்னர் சில நபர்களின் செயற்பாடே பல உயிர்கள் பலியாகக் காரணமாக அமைந்தள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது, விபத்து ஏற்பட்ட பின்னர் அங்கிருந்த சிலரினால் பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டமையினால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேருந்து மற்றும் தனியார் வாகனம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. பயணிகளின் பயணப் பொதிகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இதன்போது குறித்த வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி தீயினால் எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயினால் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட வாகனச் சாரதியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post