திருநெல்வேலி மக்கள் கடையால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆபத்து! (படங்கள்)

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பழுதடைந்த நிலையில் வழங்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் திருநெல்வேலிச் சந்தியில் உள்ள கிளையில் (மக்கள் கடை) இரண்டாம் மாதத்துக்கான உணவுப் பொருட்களில் வழங்கப்பட்ட கச்சான் சக்குப்பிடித்து துர்நாற்றம் வீசி மனித உணவுக்கு உகந்ததாக இருக்கவில்லை.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் இவ்வாறான பழுதடைந்த பொருட்கள் விநியோகிக்கும் குறித்த பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தினால் மாதம் தோறும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Previous Post Next Post