யாழில் தனியார் வைத்தியசாலையில் பாலியல் தொல்லை! நடந்தது என்ன? (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் வைத்தியசாலையில் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்களும், அதிக பணி அழுத்தங்களும் மேற்கொள்ளப்படுவதாக சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளரினால் அங்கு பணியாற்றும் பெண் தாதியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுக்கப்படுவதாகவும், அத்துடன் சிகிச்சைக்காக வரும் பெண்கள் மீதும் இவ்வாறான தொல்லைகள் இடம்பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


இத்தனைக் குற்றச்சாட்டுக்களும் தங்கள் மீதான போட்டி மற்றும் பொறாமை காரணமாக திட்டமிட்டு பரப்பப்பட்டது என குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தான் 15 வருடங்களாக கஷ்டப்பட்டு சேகரித்த பணத்தின் மூலமாகவே இவ் வைத்தியசாலையை அமைத்து தனது மனைவியுடன் இணைந்து இந்த வைத்திய பணியைச் செய்து வருவதாகத் தெரிவித்த வைத்தியசாலையின் பணிப்பாளர், தான் மூன்று வங்கிகளில் கடன் பெற்றுள்ளது தொடர்பிலும் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கிய நேர்காணலையும், அங்கு பணியாற்றும் ஏனைய வைத்தியர்கள், ஊழியர்களின் கருத்துக்களும் அடங்கிய முழுமையான காணொளி தொகுப்பு இங்கே தரப்படுகின்றது.


Previous Post Next Post