சீனாவில் ஆரம்பித்து தற்போது உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், ஐரோப்பிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.
அந்தவகையில் தற்போது பிரான்ஸில் கொரோனா வைரஸின் தாக்கம் தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
பிரான்ஸில் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக உள்ள Oise இல் இன்று திங்கட்கிழமை காலை கிட்டத்தட்ட 100 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை Morbihan நகரில் புதிதாக 9 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
நான்கு நாட்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பரிஸ் புத்தகக் கண்காட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரான்ஸில் நடைபெறும் சிறிய, பெரிய நிகழ்வுகள் அனைத்துக்கும் அரசு தடை விக்கப்பட்டுள்ளதடன், ஈஃபிள் கோபுரம், டிஸ்னிலாண்ட் போன்ற சுற்றுலாத்தலங்கள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை Montreuil நகரில் வசிக்கும் தந்தை ஒருவருக்கும் அவரது 12 வயது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Montreuil நகர முதல்வர் இத் தவலை உறுதி செய்துள்ளார். இந்த கொரோனா தொற்று பரவியதற்குரிய காரணம் உடனடியாகவே கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த 12 வயது சிறுமியின் தந்தை பரிசில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிகின்றார். கடந்த சில நாட்களாக அவர் கொரோனா நோயாளா்களுடனான சிகிச்சையின் போது உடன் இருந்துள்ளார்.
அதைத் தொடர்ந்தே அவருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவரின் மகள் Paul Eluard College இல் கல்வி கற்கின்றார். முன்னெச்சரிக்கை காரணமாக அவரின் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலைக்கு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.