அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை பெருமளவாகக் கொள்வனவு செய்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கான பால்மா உள்ளிட்ட பால்மா வகைகள், பிஸ்கட்டுக்கள், சீனி, மா, அரிசி உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முண்டியடித்து வாங்கிச் செல்கின்றனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சநிலை ஏற்பட்ட நிலையில், அரசு, பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5 வாரங்களுக்கு மேல் விடுமுறை வழங்கியதால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, வடக்கு மாகாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்படவில்லை.
தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டால் கொழும்பிலிருந்து போதிய பொருட்கள் வடக்குக்கு அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம். எந்தவொரு தடையுமின்றி வடக்கு மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் வழங்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்று ஈரானில் அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்திய போது யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பெற்றோல் நிலையங்களிலும் மக்கள் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.