கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச் சிப்பாய் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு சேர்க்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
மற்றொருவர் வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கோரானா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.