வயிற்றில் குழந்தையுடன் தண்ணீருக்குள் போஸ் கொடுத்த நடிகை! (படங்கள்)

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நடிகை சமீரா ரெட்டி.  கடந்த 2008ல் வெளியான இந்தப்படத்தை கெளதம் மேனன் இயக்கினார்.

அதற்கு முன்பு பாலிவுட் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமீரா ரெட்டிக்கு இந்தப்படம் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. இவர் கடந்த 2014ல் அக்ஷய் வர்தே என்பவரை கல்யாணம் செய்தார்.

கல்யாணம் முடிந்ததுமே சினிமாவில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லற வாழ்வில் முழுக்கவனமும் செலுத்தினார் சமீரா ரெட்டி.

இந்நிலையில் இப்போது நிறைமாத கர்ப்பிணிய்சாக இருக்கும் சமீரா ரெட்டி தண்ணீருக்குள் இருக்கும் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

தாய்மையின் பெருமையை உணர்த்தும்வகையில் இந்த போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார் சமீரா ரெட்டி. குறித்த அந்த போட்டோ சூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Previous Post Next Post