ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவியுடன் ஒருவர் கைது! (படங்கள்)

ஐந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவியுடன் கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று (01) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முறிகண்டியிலிரு;து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப் புலனாய்வு பிரிவினரும் இணைந்து சோதனை செய்தபோதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரைக் கைது செய்து, கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சான்றுப் பொருட்களாக ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜி.பி.எஸ். கருவியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 




Previous Post Next Post