பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ அவரது மனைவி சோஃபி கிராகோயர் ட்ரூடோ ஆகியோர் கொரோனோ தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தங்களை சுயமாகத் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இந்தத் தகவலை பிரதமரின் அலுவலகம் சற்று முன்னர் உறுதி செய்துள்ளது.
சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளுக்குள்ளான பிரதமர் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றார்.
அவருக்கு கொரோனா தொற்றுள்ளதா? என அறிவதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதமருடன் அவரது மனைவிக்கும் கொரோனோ தொற்றுள்ளதா? என பரிசோதனை இடம்பெறுகிறது.
இருவரும் தங்களது பரிசோதனை முடிவுகளுக்கான காத்திருக்கின்றனர். பரிசோதனை முடிவுகள் வெளியாகும்வரை இருவரும் சுயமாகத் தம்மைத் தனிமைப்படுத்தியுள்ளனர் எனவும் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.