யாழ்ப்பாணத்தில் புகையிரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதியே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் யாழ்.ஆரியகுளம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.