அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர் அடிகாயங்களுடன் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் அடிகாயங்களுடன் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் செல்வா திரையரங்குப் பகுதியில் உள்ள சிறிய ஒழுங்கை ஒன்றிலிருந்தே மேற்படி முதியவர் மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று (13) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்.கொழும்புத்துறையில் வசிக்கும் அல்லைப்பிட்டி 02 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த யோசப் அருமைநாயகம் (வயது-65) என்பவரே இவ்வாறு அடிகாயங்களுடன் மீட்கப்பட்டவர் ஆவார்.

குறித்த முதியவர் நேற்றுக் காலை கொழும்புத்துறையிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வந்து விறகு எடுத்துக் கொண்டு மீண்டும் மதியம் கொழும்புத்துறை நோக்கிச் சென்ற நிலையிலேயே காணாமல் போயிருந்தார்.

அவரின் உறவினர்கள் நேற்று இரவு வரை தேடிய போதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந் நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் செல்வா திரையரங்குப் பகுதியில் உள்ள சிறிய ஒழுங்கை ஒன்றில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட முதியவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை குறித்த முதியவர் அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாகவும், திருட்டுச் சம்பவத்துக்காகவே முதியவர் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post