உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸினால் முதன்முதலில் இலங்கைப் பெண் பாதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாலியில் உள்ள இலங்கைப் பெண்ணே இவ்வாறு இவ் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பெண், இன்று இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடியுள்ளார்.
இத்தாலியின் ப்ரேஸியா பகுதியில் வசித்து வரும் 46 வயதான பெண் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இந்தப் பெண் கடந்த 10 வருடங்களாக தனது கணவருடன் இத்தாலியில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் தொற்று குறித்து பேசும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
அவர் சிங்கள மொழியில் தெரிவித்துள்ளதாவது:-
"எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை சென்று சிகிச்சைப் பெற முயற்சித்தேன்.
அந்தச் சந்தர்ப்பத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததை வைத்தியர்கள் அறிவித்தனர். இத்தாலி நாட்டுக்கு வந்து சுமார் 10 வருடங்கள் கடந்துவிட்டன. நான் பணிபுரியும் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்தார்கள்.
அவரிடமிருந்து எனக்கும் தொற்றியதாக எனக்கு அறியக் கிடைத்தது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அந்தப் பெண் பிறிதொரு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
என்னைப் பார்வையிடுவதற்கு எவரையும் வைத்தியசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. எனது கணவருக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" - என்று குறிப்பிட்டுள்ளார்.
"இலங்கையின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் ஏனைய தரப்பினர் உங்கள் நிலைமை தொடர்பில் அக்கறையுடன் செயற்படுகின்றனர். இலங்கை மக்கள் அனைவரும் நீங்கள் நலம்பெற வேண்டும் என்பதில் அக்கறையுடன் அவதானித்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆகையினால் நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை" என்று குறித்த பெண்ணுடன் இலங்கையிலிருந்து உரையாடிய அதிகாரி தெரிவித்துள்ளார்.