யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாதவர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந் நிலையில் யாழ்.கோண்டாவில் பகுதியில் தரித்துநின்ற வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோண்டாவில் சந்தியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றுக்கு முன்பாக நேற்றிரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வியாபார நிலையத்தின் முகாமையாளரின் வாகனமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டமைக்கான காரணம் என்ன என்று தெரியாதென வாகன உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.