உலக நாடுகள் மட்டுமன்றி தற்போது இலங்கையிலும் கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
அந்தவகையில், கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இன்று (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 233ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
அத்துடன், இன்று ஏப்ரல் 14ஆம் திகதி மட்டும் 15 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோர். ஏனையவர்களில் நால்வர் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ராகமையைச் சேர்ந்தவர்கள்.