ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல்! விசேட வர்த்தமானி வெளியாகியது!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 25ம் திகதி நடைபெறவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்ட இலங்கையின் பொதுத்தேர்தல் மீண்டும் பின்தள்ளிவைக்கப்படும் விசேட வர்த்தமானி இன்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தேர்தல் 2020 ஜூன் 20ம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸை காரணம் காட்டி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காது தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும், சுகாதார அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

அதனையடுத்தே தேர்தலை ஜூன் 20ம் திகதி நடத்துவதென்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவரும் அரசியல்கட்சிகளின் செயலர்களை சந்திக்கவுள்ளனர்.

ஜூன் 20ம் திகதி பொது தேர்தல்!  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!!

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஜூன் மாதம் 20ம் திகதி சனிக்கிழமை பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


Previous Post Next Post