யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 24 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில் 12 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 231ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேரின் மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அத்துடன் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராகமையைச் சேர்ந்த 8 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
அவர்களில் 4 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தவர் உள்பட 12 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.