பிரான்ஸ் தலைநகா் பரிசின் புறநகர் பகுதியான Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) இல் Parc de Sausset பொதுப்பூங்காவில் வைத்து பெண்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி 15 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 24ம் திகதி, பூங்காவில் 28 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரை பின்தொடர்ந்து, அவருடன் உரையாடலைத் தொடுத்து, அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த குறித்த இளைஞர் முனைந்துள்ளார்.
பெண் சாதூரியமாக தப்பித்துக் கொண்டு சத்தத்தை எழுப்பிய நிலையில், குறித்த இளைஞன் தப்பித்துள்ளான்.
தொடர்ந்து, குறித்த இளைஞன் குறித்த அடையாளங்களை பெண், காவல்துறையினருக்கு தெரிவித்திருந்த நிலையில், தற்போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இதே பூங்காவில் கடந்த 22ம் திகதியும், 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரையும் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளான். குறித்த பெண்ணை தாக்கியிருந்ததோடு, சுயநினைவற்ற நிலையிலேயே சம்பவம் இடம்பெற்றிருந்தது.
பொதுமுடக்க இக்காலத்தில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்ற நிலையில், பெண்கள் மீது பாலியல்அச்சுறுத்தல்களும், வன்முறைகளும் அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.