யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட எட்டுப் பேரில் மூவர் ஒரே குடும்ப உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகள்களுக்கே கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 பேரை சோதனைக்குட்படுத்திய நிலையிலேயே குறித்த எட்டுப் பேருக்குக் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 7 பேரும் வவுனியாவைச் சேர்ந்த ஒருவருமாக எட்டுப் பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு ஆண்களும் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதில் தந்தை மற்றும் 9, 11 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அரியாலை மத போதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனத் தெரிவித்து பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.