யாழில் காணாமல் போன பிரதேச சபை உறுப்பினர் சற்றுமுன் சடலமாக மீட்பு! (படங்கள்)

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (வயது-37)  சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரின் மோட்டாா் சைக்கிள் மற்றும் உடமைகள் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள வடமராட்சிக்  கடலில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிரதேச சபை உறுப்பினரின் மரணம் தற்கொலையா? கொலையா என்பது தொடா்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமானாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்புபட்ட செய்தி:- யாழில் பரபரப்பு! வலி.கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் செந்தூரனைக் காணவில்லை!!


Previous Post Next Post