யாழில் திடீரென வீசிய மினி சூறாவளி! ஆலயங்கள் உட்பட வீடுகள் சேதம்!! (வீடியோ)

யாழில் இன்று பிற்பகல் மினி சூறாவளி தாக்கியதில் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த மினி சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த மினி சூறாவளி தாக்கத்தால் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மணற்காட்டு கந்தசுவாமி ஆலயம், ஒளி சுட்டான் ஞானவைரவர் ஆலயம், மறவன்புலவு பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்டவை முற்றாக சேதமடைந்துள்ளன.

இந்த மினி சூறாவளியால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் கோழிக் கூண்டுகள், மாட்டுக் கொட்டில்கள், சுற்று மதில்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்து உள்ளது.





Previous Post Next Post