லண்டனில் வசிப்பவரால் அல்லைப்பிட்டி மக்களுக்கு உதவிகள்! (படங்கள்)

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் அல்லைப்பிட்டிப் பகுதியில் நாளாந்த வருமானம் பெறும் குடும்பங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை எதிா்கொண்டுள்ளனா்.

இதன் அடிப்படையில், அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரப் பகுதியில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு உட்பட சுமார் 100 குடும்பங்களுக்கான உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வசிக்கும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த தவவிநாயகம் சூரியகுமார் அவர்களின் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி உதவியில் குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி உறுப்பினர் பிலிப் பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் அல்லைப்பிட்டி பிலிப்பு தேவாலயத்தில் வைத்து மக்களுக்கு இன்று (18.04.2020) வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post