யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் குகதாஸனை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சு மாகாண சுகாதாரவைகள் பணிமனைக்கு அவசர அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருப்பதாக தெரியவருகின்றது.
குறித்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், அரச மருத்துவர்கள் சங்கத்தினைச் சேர்ந்த வைத்தியர் காண்டீபன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பணிப்பாளரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணியிலிருந்து விலக்கி நாளையே அவர் தொடர்பிலான விசாரணையினை ஆரம்பிக்குமாறும், அவருடைய பதவிக்கு அதே வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் கமலநாதனை தற்காலிகமாக நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை விசாரணை முடியும் வரையில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் அவரை தற்காலிகமாக பணியில் இணைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்று தெரியவருகிறது.
இதேவேளை நாளை தொடக்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த மருத்துவர்கள் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.