யாழ்ப்பாணத்தில் யாசகம் செய்தவர் உணவின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் யாசகம் செய்து வந்த ஒருவர் உணவின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

கொரோனா அச்சத்தால் முழு நாடும் முடக்கப்பட்டு, ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில், யாசகர்கள் உணவை பெறுவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

அத்துடன், தெருவோரம் சுற்றித்திரிந்த கால்நடைகளும் உணவின்றி அல்லாடி வந்தன.
யாழ்ப்பாணம் தொடர்ந்து நீண்டநாட்களாக முடக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரில் யாசகம் பெற்று வந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் கோவிலடியில் அவரது உடல் மீட்கப்பட்டது.
Previous Post Next Post