யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று பரவ காரணமானவர் என கூறப்படும்இ சுவிஸ் போதகர் சற்குணராசா மீண்டும் இலங்கை வந்தால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்ட பாதுகாப்பு தகவல்களை மேற்கோள்காட்டி யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அவர் தொடர்பில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாமல் தெரிந்துகொண்டே அவர் நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவருக்கு பிரயாணம் செய்ய அனுமதி வழங்கியவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அவரின் விபரங்கள் இலங்கையின் விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த போதகர் தற்போது நோயிலிருந்து குணமாகி வழமையான போதகர் பணியை சுவிஸில் முன்னெடுத்துள்ளதாவும் கூறப்படுகின்றது.