இந் நிலையில் இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளிலும் எமது குடிமக்கள் திரண்டு குடிபானங்களைக் கொள்வனவு செய்வதைக் காண முடிகின்றது.
ஆனால் அத்தியாவசியமான உலர் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடக்கின்ற பரிதாப நிலை காணப்படுகின்றது.
அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்வதற்கும், வழங்கிய 5 ஆயிரம் ரூபாயை அரசு திரும்பப் பெறுவதற்குமான ஒரே இடம்தான் இந்த மதுபானசாலைகள்.