பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழரின் மனிதாபிமானம்! குவியும் பாராட்டுக்கள்!! (படங்கள்)

பிரான்சில் ஈழத்தமிழர் ஒருவரின் மனித நேயப்பணி சமூக ஊடகங்களில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த நாட்டின் 91 ஆவது மாவட்டத்தில் இருக்கும் ஈழத்தமிழரான ரவி என்பவர், அந்த பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரத்துறையினர் மற்றும் பொலிசார், தீயணைப்பு துறையினருக்கு சமைத்த உணவை வழங்கி வருகிறார்.

தமிழ் பாரம்பரிய உணவு, பிரான்ஸ் உணவு வகைகள் என கலந்துகட்டி, விதவிதமான உணவு வகைகளை வழங்கி வருகிறார்.

கடந்த 6 நாட்களாக அவரது மனிதநேயப்பணி தொடர்கிறது. மே 11ஆம் திகதி வரை இந்த பணியை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது சொந்தப் பணத்தை பாவித்து, பிரான்ஸில் குடியேறிய இரண்டு சிங்கள இளைஞர்களின் துணையுடன் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார். தற்பொழுது தினமும் 150 உணவு பொதிகளை வழங்கி வருகிறார்.




Previous Post Next Post