பிரிட்டனில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டுத் தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பான பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மாமுனைப் பகுதியைச் சேர்ந்த நிதின்குமார் (வயது-40) என்பவரே இந்தப் பாதகத்தைப் புரிந்துள்ளார். அவரது மனைவி நிஷாந்தினி நடந்த சம்பவங்கள் தொடர்பாக இங்கிலாந்து ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
குமார் 1999 ஆம் ஆண்டு பிரிட்டனுக்குச் சென்றார். அவர் 2015 ஆம் ஆண்டு இலங்கை சென்றபோது பெற்றோர் நிச்சயித்த திருமணம் 2015 இல் வடமராட்சிப் பகுதியில் நடந்தது. பிள்ளைகள் இருவரும் பிரிட்டனில் பிறந்தவர்கள்.
கிழக்கு லண்டனில் இல்போர்ட் அலட்ப்றோ றோட் நோத்தில் உள்ள விநாயகன் ஸ்ரோருக்கு மேல் வசித்து வந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மூன்றரை வயதான மகன் நிகிஷ், ஒரு வயதான மகள் பாபின்ஜா ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.
குமார் தற்போது ஈஸ்ட் லண்டன் வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார். அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நிஷாந்தினி தனது சகோதரி ரஜனியுடன் மேற்கு லண்டன் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
நான் என் பிள்ளைகளைப் படுக்கையில் இரத்தக் கோலத்தில் கண்டேன். அவர்கள் இரத்தத்தால் மூடப்பட்டிருந்தனர். அவர்களை சுவாசிக்க வைக்கப் போராடினேன். என் காட்சிகள் என் வாழ்நாள் எல்லாம் என்னுடனே இருக்கப் போகின்றது. என்னால் இரவில் தூங்க முடியாது. அந்தக் காட்சிகள் என் நினைவுக்கு வருகிறது. இது கற்பனைக்கு எட்டாத மோசமான கனவைப் போன்றது. நான் என்ன செய்கிறேன் என்பதை விபரிக்க வார்த்தைகள் இல்லை.
கடவுள் என்னை ஏன் தண்டித்தார் என்று எனக்குப் புரியவில்லை. நான் தொடர்ந்து வைத்தியசாலைக்கு அழைப்பெடுத்துக் கணவரின் நிலைமை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றேன். இந்த நேரத்தில் நான் அவரைப் பற்றி எப்படி உணர்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் வாழ விரும்புகிறாரா? இல்லையா? என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் என் குழந்தைகளை இழந்து விட்டேன். இப்போது நானும் ஒரு விதவையாகவே உணர்கிறேன்.
இதன்போது நிஷாந்தினியையும் கணவன் வெட்ட முயற்சித்துள்ளார். கைத் தொலைபேசியுடன் வீட்டுக்குள் அவர் தப்பியோடியுள்ளார். ஓடும்போதே 999 இலக்கத்தை அழுத்தி அவரச நோயாளர் காவு வண்டிக்கு தகவல் தெரிவித்தபடி ஓடினார்.
கணவர் தன்னை விரட்டுவதாக உணர்ந்து ஓடினர். பின்னர் எந்தச் சத்தமும் இல்லாததையடுத்து மீண்டும் படுக்கையறைக்குப் பிள்ளைகளுடன் ஓடி வந்துள்ளார். இதன்போது குளியல் அறைக் கதவைத் திறந்து கொண்டு நிதின்குமார் தள்ளாடியபடி அந்த அறை நோக்கி வந்துள்ளார்.
அவர் தனது கழுத்தை அறுத்திருந்தார். அவரது கழுத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. தள்ளாடியபடி நடந்து வந்து பிள்ளைகளின் அருகில் சரிந்து விழுந்துள்ளார். அவர் ஒரு கணிவான மென்மையான மனிதர். மிகவும் மென்மையாகப் பேசுவார். இதில் எதுவுமே அர்த்தமில்லை. இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என நிஷாந்தினி குறிப்பிட்டார்.
தனது கணவனுக்கு மனநோயின் சில அறிகுறிகள் தென்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த நிஷாந்தினி குமார் அன்றைய தினம் மாலையில் தான் குளியல் அறையில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அப்போது அறைக்குள் மகன் வாந்தி எடுப்பதைப் போன்ற சத்தம் கேட்டுள்ளது. மகனுக்கு என்ன நடந்தது என்று பார்க்க அறைக்குள் சென்று எட்டிப்பார்த்துள்ளார். அப்போது படுக்கையில் இரண்டு பிள்ளைகளும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளன. அருகில் சமையல் அறைக் கத்தியை இரத்தம் தோய்ந்த நிலையில் பிடித்தபடி உட்கார்ந்திருந்த கணவன் தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.
இந்தக் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிஷாந்தினி பிள்ளைகளுக்கு என்ன செய்தீர்கள் எனக் கதறியுள்ளார். எனினும் நிதின்குமார் எதுவும் பேசாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கழுத்தில் வெட்டுக் காயத்துடன் மகன் மூச்செடுக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. உடனடியாக பிறிச்சைத் திறந்து ஐஸ் கட்டியை எடுத்து வந்து கழுத்தில் வைத்து இரத்தம் வெளியேறுவதைத் தடுக்க முயற்சித்துள்ளார். மகள் இரத்த வெள்ளத்தில் எந்த அசைவுமற்று கிடந்துள்ளார்.
நான் என் கணவருடன் சேர பிரிட்டனுக்கு வந்தபோது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கப் போகின்றோம் என்று நினைத்தேன். நான் உணரும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் வெளிப்படுத்த எதுவும் இல்லை. என் குழந்தைகள் என் வாழ்க்கை. சில சமயங்களில் நானும் கொல்லப்பட்டிருக்கலாம் என விரும்புகின்றேன். ஏனென்றால் நான் இந்த வகையான வலியை அனுபவித்திருக்கவில்லை. என்னால் முடியாது எனக் கதறி அழுதுள்ளார்.