இலங்கையில் முதன்முறையாக நாய் ஒன்றுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாஎல சுதுவெல்ல பகுதியிலேயே நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கொங்கொங் போன்ற நாடுகளில் பூனை நாய்களுக்கு தொற்று அறியப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்போது ஸ்இலங்கையிலும் நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று இனம் காணப்பட்டிருக்கிறது.
இதேவேளை இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 420ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நேற்று இரவு 11 மணி வரை 417 பேர் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.