தீ விபத்தில் சிக்கிய பிரான்ஸ் Notre Dame தேவாலயத்தின் இராட்சத மணி ஒலித்தது!! (வீடியோ)

பிரான்ஸில் உள்ள உலகப் புகழ் பெற்ற தேவாலயமான Notre Dame தேவாலயம் கடந்த ஆண்டு (15.04.2019) பாரிய தீ விபத்தில் சிக்கி பலத்தை சேதமடைந்திருந்தது.

அதன் பின்னர் தேவாலயத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த திருத்தப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் இந்த இம்மானுவேல் மணி ஒலிக்கவிடப்பட்டிருந்தது. குறித்த ஆலயத்தின் தெற்கு கோபுரத்தில் இந்த மணி அமைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய மணி இதுவாகும். 13 தொன் எடை கொண்ட மணி, விசேட நாட்களில் மட்டும் ஒலிக்க வைக்கப்படும்.

கட்டடம் மிகுந்த அதிர்வுக்குள்ளாகும் என்பதால் இந்த மணி ஒலிக்க விடுவதைக் கடந்த பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post