இந்தியாவில் நடந்த பயங்கரம்! நடு வீதிகளில் மயங்கி விழும் பொதுமக்கள்!! (வீடியோ)

இந்தியாவில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விசவாயு கசிவால் 8 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர்.

இந்தியாவில் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் உள்ள LG Polymers நிறுவனத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் திடீரென விச வாயு (Poisonous Gas) கசிவு ஏற்பட்டதால் இரண்டு முதியவர்கள் மற்றும் 8 வயது சிறுமி உட்பட 8 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன், உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்து மக்களை வெளியேற்றத் தொடங்கினர்.

சுவாசிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்கு செயற்கைச் சுவாசம் வழங்கப்படுகிறது. இச்சம்வத்தில் கால்நடைகளும் இறந்துள்ளதுடன் மயங்கி வீதிகளில் விழுந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் சிலரை பரிசோதித்த மருத்துவர்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியான வாயு ‘ஸ்டைரீன்’ ஆக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்டைரீன் என்பது எரியக்கூடிய திரவப் பொருள்களில் ஒன்று. கார்களின் கதவுகள்இ பைப்புகள்இ பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட கடினமான பிளாஸ்டிக் பாகங்கள் தயாரிப்பில் இந்த ஸ்டைரீன் பயன்பாடு அதிகம்.

இது போன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் எல்.ஜி.பொலிமர்ஸ் என தெரிவிக்கப்படுகிறது.






Previous Post Next Post