வேலணையில் கிணற்றில் விழுந்த மாட்டைக் காப்பாற்றிய இளைஞர்கள்! (படங்கள்)

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியான வேலணை மேற்கு சிற்பனையில் உள்ள கிணற்றுக்குள் மாடு ஒன்று விழுந்து உயிருக்குப் போராடிய நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனைக் கண்ட வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர் நடனசிகாமணி, வேலணை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் அப் பகுதி இளைஞர்களின் உதவியுடன் குறித்த மாட்டை மீட்டுள்ளனர்.

பல மணிநேரமாக கிணற்றுக்குள் வீழ்ந்து உயிருக்குப் போராடிய நிலையிலேயே குறித்த மாடு காப்பாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை தீவகப் பகுதிகளில் அண்மைக் காலமாக வளர்ப்பு மாடுகள், கட்டாக்காலி மாடுகள் என்பன திருடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இந் நிலையில், அப் பகுதி இளைஞர்களின் இம் முயற்சி பலராலும் பாராட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post