வைரசுடன் வாழ பழக புல்வெளியில் குவிந்த பாரிஸ் மக்களை ஒலிபெருக்கி மூலம் பொலிஸாா் விரட்டியுள்ளனா்.
பாரிசில் நேற்றைய தினம் பொது வெளியில் திடீரென குவிந்த பொதுமக்களால் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. பாரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள Esplanade des Invalides முன்றலில் பரந்த புல்வெளியில் கட்டுப்படுத்தமுடியாத அளவு மக்கள் குவிந்தனர்.
வெயில் காரணமாக ஓய்வெடுப்பதற்காக அவர்கள் அங்கு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களில் பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. தவிர சமூக இடைவெளியையும் பேணவில்லை.
அதிகளவான மக்கள் இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்தனர். மேலும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும் படி காவல்துறையினர் பணித்தனர். ஒலிபெருக்கி மூலம் இவ்வறிவித்தலை அவர்கள் வெளியிட்டனர்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் எனவும், புல்வெளியில் அமர்ந்து மது உட்கொள்பவர்களுக்கும் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்தனர்.
அதன் பின்னர் மக்கள் மெல்ல மெல்ல அங்கிருந்து வெளியேற ஆரம்பித்ததை காணக்கூடியதாக இருந்தது.