வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, மண்கும்பான் பிள்ளையார் கோவிலுக்கும் அராலி இராணுவ முகாமுக்கும் இடைப்பட்ட பகுதியில், இன்று (05) நடைபெற்ற இவ் விபத்து சம்பவத்தில் ஹயஸ் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியை விட்டு விலத்திய நிலையில் வேகமாகச் சென்ற ஹயஸ் எதிரில் நின்ற மரத்துடன் மோதி முறித்துக் கொண்டே நின்றுள்ளது. இதில் ஹயஸின் முன்பக்கம் மிகவும் கடுமையாக சேதமடைந்துள்ளள்ளது.
அவ்விடத்திற்கு வந்தவர்கள் காயமடைந்த ஓட்டுநரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஓட்டுநர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.