கொரோனத் தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே பிரெஞ்சு அரசாங்கம், இருவரிற்கு இடையிலான சுகாதாரப் பாதுகாப்பு இடைவெளியாக (distanciation physique) ஒரு மீற்றர் தூரத்தினையே கடைப்பிடித்தே வருகின்றது.
தற்போதுகூட, உணவகங்ளிலும் ஒவ்வொரு மேசைக்கும் இடையிலான இடைவெளிகளாக ஒரு மீற்றர் இடைவெளியை மட்டுமே அறிவித்துள்ளது.
ஆனால் இந்த இடைவெளி போதுமானதா? உதாரணத்திற்கு ஜேர்மனி 1.5 மீற்றர் இடைவெளியைப் பயன்படுத்துகின்றது. ஆனால் தற்போது அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் அடிப்படையில், ஒவ்வொருவரிற்கிடையிலும் 8 மீற்றர் இடைவெளி இருந்தால் மட்டுமே, 100% கொரோனத் தொற்றைத் தடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
முக்கியமாக உட்புறங்களில், உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்திற்குள் அல்லது வர்த்தக நிலையங்களிற்குள், தொற்று உள்ள ஒருவரின் தும்மல் அல்லது, பேச்சிலிருந்த வெளிப்படும் துகள்கள், காற்றில் எட்டு மீற்றர் வரை நீடிக்கும் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் இதனை மீளாய்வு செய்யுமா?