எட்டு வாரகால தொடர் பொதுமுடக்கததின் முதன் நீக்க நாளினை மதுபானங்களுடன் நீர்கரையோரங்களில் கொண்டாடியதன் விளைவு, இன்று அமைச்சு அதிரடி உத்தவினை பிறப்பித்துள்ளது.
பரிசின் Canal Saint-Martin நீர்கரையோரத்தில் பெருமளவானவா்கள் மதுபானங்களுடன் காணப்பட்டது மட்டுமல்லாது, வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார நடைமுறைகள் பேணப்படாமல் இருந்தமையும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
உணவகங்கள், அருந்தகங்கள் யாவும் தொடர்ந்தும் மூடப்பட்டள்ள நிலையில், மதுபாட்டில்களுடன் இவர்கள் ஒன்றுகூடியிருந்தனர். காவல்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் உள்துறை அமைச்சின் பணிப்புக்கு அமைய, மாவட்ட ஆட்சியகம் préfet de police அதிரடி அறிவிப்பாக இன்று மே 12ம் நாள் செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை இப்பகுதிகளில் மதுபான பாவனை தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இதுஒருபுறமிருக்க பரிஸ் நகரபிதா, பரிசின் பூங்காக்களை திறப்பதற்கு அனுமதியினைத் தருமாறு மீளவும் ஒரு கோரிக்கையினை அரசாங்கத்தினை நோக்கி முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.