யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் மனைவிக்கு எதிராக சுன்னாகம் சபாபதிக் கிராம மக்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமது கிராமத்தை வேட்பாளரின் மனைவி இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தியே பொதுமுக்கள் நேற்று மதியம் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பெண் எமது கிராமத்தில் 22 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கினார். தனக்கு அறிமுகமான ஓர் இணைய ஊடகத்தையும் அழைத்து வந்திருந்தார்.
அவர் அந்த ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவித்தார். எமது கிராமத்தைப் பற்றி தரக்குறைவாக அவர் கருத்து வெளியிட்டார். எமது பெண்கள் குடும்பத்துக்கு கட்டுப்படாதவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்தக் கிராமத்தில் 56 குடும்பங்கள் வசிக்கின்றன. ஓ.எல். பரீட்சைக்குத் தோற்றிய 5 பேர் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். பல்கலைக்கழக அனுமதி கிடைத்த ஒருவரும் உள்ளார்.
அரச வேலை வாய்ப்பைப் பெற்ற 17 குடும்பங்களும் உள்ளன. எமது கிராமத்தை விற்று அவர்கள் வாக்குச் சேகரிக்கக் கூடாது. அதற்காக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று போராட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.