நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் 11 பேரையும் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுபதிகாரி பிரசாத் பெர்னாண்டோவால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் குருநகா், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தமிழாராச்சி மாநாட்டு நினைவிடம் ஆகிய இடங்களில் நேற்று அஞ்சலிக்கப்பட்டது.
இதேவேளை நாடுமுழுவதும் அபாயகரமான கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் பொதுமக்களை ஒன்று திரட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த மனு மீதே இந்தக் கட்டளையை நீதிமன்றம் ஆக்கியுள்ளது.
மனுவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர், சட்டத்தரணிகள் நடராசா காண்டீபன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் வரதராசா பார்த்திபன், வாசுகி, கிருபாகரன், தனுஷன், விஷ்ணுகாந்த் மற்றும் தமிழ்மதி ஆகிய 11 பேரின் பெயர்கள் இடப்பட்டு அவர்கள் நிகழ்வை நடத்தத் தடை உத்தரவு வழங்குமாறு கோரப்பட்டது.
அந்தக் கோரிக்கையை ஏற்று அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள மக்களை ஒன்று திரட்டும் நிகழ்வுகளை நடத்தவேண்டாம் என்று மேல் குறிப்பிட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம்
- பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன்
- தேசிய அமைப்பாளா், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்
- சட்ட ஆலோசகா் சட்டத்தரணி கனரட்ணம் சுகாஷ்
- சட்ட ஆலோசகா் சட்டத்தரணி நடராசா காண்டீபன்
- யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் வரதராஜன் பாா்த்திபன்
- யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினா் தனுசன்
- யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினா் கிருபாகரன்
- கனகசபை விஸ்ணுகாந்
- சுதாகரன்
- தமிழ்மதி