வீதியால் சென்ற பெண்ணுக்கு வார்த்தைகளாலும் சைகைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மடம் வீதியில் நடந்து சென்ற 30 வயதுடைய பெண் ஒருவரை நோக்கி வார்த்தைகளாலும் சைகளாலும் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலும் அவரது மைத்துனர் வழங்கிய வாக்குமூலத்தில் அடிப்படையிலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை முற்படுத்தப்பட்டார். 1993ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 345ஆம் பிரிவின் கீழ் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மன்றில் பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல்இ சந்தேக நபரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.