கிளிநொச்சியில் வீடு புகுந்து பெண்களைத் தாக்கி அடாவடியில் ஈடுபட்ட கும்பல்! (படங்கள்)

கிளிநொச்சி பரந்தனில் நேற்றிரவு ஊடரங்கு சட்டம் அமுலில் இருந்த போது இனம் தெரியாத கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கும்பல் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதம் விளைவித்துள்ளதுடன் ஒருதொகை பணம் மற்றம் நகை என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் இனம் தெரியாத ஒரு கும்பல் அந்தப் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதன்போது அந்த வீட்டில் வசித்த இருந்த பெண்களையும் தாக்கியதுடன், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகள் என்பவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம், உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றையும் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும்பாதிக்கப்பட்ட தரப்பினர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.



Previous Post Next Post