அமைச்சர் ஆறுமுகம் தொண்டமன் தனது 55ஆவது வயதில் காலமானார்.
தலங்கம மருத்துவமனையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.10 மணியளவில் காலமானார் என்று மருத்துவமனைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.
வீட்டிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பிறந்த சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான், தந்தை வழியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார்.
கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர். கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையில் ஆறுமுகம் தொண்டமான் தோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக காலமாகும்வரை இருந்தார்.
ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு கட்சியின் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார்.
முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74,000 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
அதன் பின்னர் 2000, 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.