யாழ்ப்பாணக் குடாநாட்டு முழுவதுதிலும் விற்பனை செய்யப்படும் வெற்றிலை, பாக்கு நெடுந்தீவில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு கொளுத்தப்படுகின்றது என கவலை தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவில் உள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வெற்றிலை, பாக்கு இருப்பின் பொதுச் சுகாதார பரிசோதகர் அவற்றைப் பறிமுதல் செய்கின்றனர். அவர் அவற்றை நீதிமன்றில் முற்படுத்தாது பிரதேச சபை தவிசாளர் முன்பாக தீயிட்டு எரிக்கின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல இடங்களிலும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. நகர்ப் பகுதியில் நூற்றுக் கணக்கான வெற்றிலை கடைகளிலும் குடநாட்டின் சகல சந்தைகளிலும் விற்கப்படுகின்றன என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி நெடுந்தீவு பொது சுகாதார உத்தியோகத்தரின் சுகாதார மருத்தவ அதிகாரி பிரிவான வேலணை சுகாதார சுகாதார மருத்தவ அதிகாரியிடம் கேட்டபோது,
சட்டத்தின் பிரகாரம் வெற்றிலை, பாக்கு விற்பனை செய்ய முடியாது. இந்தச் சட்டத்தை அதிகம் பேர் நடைமுறைப்படுத்துவது கிடையாது. ஆனால் நெடுந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றார் என்றார்.