குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர்.
வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர்.
அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி அவர்களை துரத்திவிட்டு, சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் சிறுமிகள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு ஊரவர்களை அழைத்து பச்சை மட்டையால் தாக்கியுள்ளனர். சிறுமிகள் இருவரும் தமது நண்பர்களுடன் தகாத உறவில் இருந்தனர் என்று கூறி பொலிஸாருக்கு அந்த இளைஞர்கள் மூவரும் தகவல் வழங்கியுள்ளனர்.
சிறுமிகளை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். சட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் தமக்கு நடந்தவற்றை வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
சட்ட மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்த சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சிறுமிகள் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சிறுமிகளை துன்புறுத்திய மூவரும் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர்.