பேஸ்புக்கில் காதலித்து வந்த தனது காதலியை முதன்முதலாகச் சந்திப்பதற்கு வந்த இளைஞரை வழிமறித்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப் பகுதியில் சற்று முன் நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் இளைஞருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு உரையாடி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் இருவரும் இராமநாதன் வீதியில் உள்ள ராஜா கிறீம்கவுசில் சந்திப்பதாக பேசிக் கொண்டுள்ளனர்.
இதன்படி குறித்த இளைஞர் இருவரும் பேசிவைத்து நேரத்திற்கு அங்கு வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் அங்கு வரவில்லை. இந்நிலையில் அங்கு 3 மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும், அதனால் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கில் இழுத்து ஏற்றியுள்ளனர்.
அங்கிருந்து கொக்குவில் பெற்பதி வீதிக்கு வந்த அந்த கும்பல், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு பின்னால் வைத்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த கைத்தொலைபேசி மற்றும் பணத்தினை பறித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னால் விழுந்துள்ளார். சிறிது நேரம் அங்கு நின்று அந்த இளைஞர் குழு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதன் பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரத்தம் வழிந்தவாறு வீதிக்கு வந்த இளைஞர் அங்கிருந்துவர்களின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.