கொரோனாச் சந்தேக நபர்களை ஏற்றி வந்த அம்புலன்ஸ் யாழில் விபத்து! (படங்கள்)

கோரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளோரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நோயாளர் காவு வண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.

எனினும் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பில்லை. இந்தச் சம்பவம் தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கருகாமையில் ஏ-9 வீதியில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் இடம்பெற்றது.

இரணைமடு விமானப்படையின் தனிமைப்படுத்தப் முகாமிலிருந்து கோரோனா தொற்று அறிகுறியுடன் உள்ள மூவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வந்த நோயாளர் காவு வண்டியும், டிப்பர் வாகனமுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியிருந்தன.

இதன்போது உயிர் சேதமோ காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து கோரோனா தொற்று அறிகுறி உள்ள மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிப்பர் வாகனத்தை தடுத்து வைத்துள்ள கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.





Previous Post Next Post