யாழ்ப்பாணக் “குடி” மக்களால் சீர்குலைந்தது சமூக இடைவெளி!(வீடியோ)


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை 11 ஆம் திகதியிலிருந்து ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு யாழ்ப்பாணம் மெல்ல மெல்ல வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. இருந்தும் மதுபானக் கடைகள் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை மதுபானக் கடைகள் திறப்பதற்கான அனுமதி இன்று காலை 11 மணியிலிருந்து வழங்கப்பட்டது.

இதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் குடி மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.

இதன் காரணமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட எந்தவிதமான சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படாது, சமூக இடைவெளியும் சீர்குலைந்து காணப்பட்டது.

ஓரிரு மதுபானக் கடைகளைத் தவிர ஏனையவற்றில் குடி மக்கள் வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை பேணவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Previous Post Next Post