பேஸ்புக்கில் வெளியான தவறான தகவலால் மனவிரக்தியடைந்த இளம் குடும்பஸ்தா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் ஏ-9 வீதியோரமாக உள்ள அரச மரமொன்றிலேயே அவர் இன்று (19) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியில் உள்ள புகைப்பரிசோதனை நிலையம் ஒன்றில் பணிபுரியும், கல்வியங்காட்டைச் சேர்ந்த இராசு தீபன் (வயது-28) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவாா்..
நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையிலேயே இன்று அவா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
குறித்த நபர் தொடர்பில் நேற்று முன்தினம் போலி பேஸ்புக் கணக்கு ஒன்றில் ஊடாகத் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், புகைப்படங்களும் அதில் பதிவேற்றப்பட்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட மன விரக்தியே இவர் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருக்கலாம் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த பேஸ்புக்கில் உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.