இதேவேளை, பிந்திக் கிடைத்த தகவலின்படி நேற்று சட்டவிரோத மண் கடத்தல் தொடர்பில் அங்கு தகராறு இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் கடத்தலை கட்டுப்படுத்த பொலிசார் முயன்றபோது, குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்த இளைஞர்கள் பொலிசாருடன் தகராற்றில் ஈடுபட்டதாக அந்த பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, இன்று அவர்களை கைது செய்ய பொலிஸ் அணிகள் களமிறங்கியபோதே, இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
----------------------------------------------------------------------
வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைதிடல் கிராமத்தில் பொலிஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலர் தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்குச் செல்ல பயந்த நிலையில் தமது வீடுகளில் தங்கி இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்று. நேற்று வியாழக்கிழமை குடத்தனை மாளிகை திடல் கிராமத்தில் பருத்தித்துறை பொலிஸார் சென்றுள்ளனர்.
அங்கு கன்ரர் வாகன உரிமையாளர் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் மணல் கடத்தல் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர்.
“பொலிஸார் எமது வீடு தேடி வந்தனர். எமது பயன்பாட்டில் உள்ள கன்ரர் வாகனத்தின் உரிமையாளர் யார் கேட்டனர். வாகன உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகக் கூறினோம். அவரைக் கூப்பிடச் சொன்னார்காள். நாம் வாகன உரிமையாளரை கொண்டுவரமுடியாது என்று கூறினோம். ஏன் இவ்வாறு விசாரிக்கின்றீர்கள் ஏன்று பொலிஸாரிடம் கேட்டோம். உங்களுடைய கன்ரர் வாகனத்தில் கள்ள மணல் அகழ்ந்ததாக தகவல் கிடைத்தது என்று பொலிஸார் கூறினர். சேர் நீங்கள் எங்கள் வாகன ஏஞ்சினைத் தொட்டுப் பாருங்கள் சூடாகவா இருக்கு என்று” என்று வாகனப் பயன்பாட்டாளர் கூறினார்.
பொலிஸார் இவ்வாறு தர்க்கப்படுவதை சிறுவன் ஒருவன் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றான். அதனை அவதானித்த பொலிஸார் அந்த அலைபேசியை பறித்து எடுத்திருக்கின்றார்கள். இதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு அலைபேசி உரிமையாளர் கேட்டபோது, அதனை வழங்க பொலிஸார் மறுத்த நிலையில் உறவுகள் ஒன்று கூடி பொலிஸாருடன் முரண்பட்டனர். அதனால் அந்த நபரின் தொலைபேசியை ஒப்படைத்து சென்றிருந்தனர்.
இன்றைய தினம் மீண்டும் அந்தக் கிராமத்திற்கு வருகைதந்த பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் அலைபேசியில் ஒளிப்பதிவு எடுத்த சிறுவன், பெண்கள் உள்பட பலரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில் இரண்டு பெண்கள் உள்பட மூவர் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப்பட்டிருக்கின்றனர். பலர் தலை, பற்கல் உள்பட உடலின் பல பாகங்களிலும் தாக்கப்பட்டு பொலிஸாரின் அச்சுறுத்தலால் அவர்களுக்குப் பயத்தில் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இதேவேளை, அந்தக் கிராம மக்களை கஞ்சா, கசிப்பு போன்றவற்றை வைத்து உங்களை கைது செய்வதாகவும் மிரட்டியிருக்கிறார்கள். இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மாளிகை திடல் கிராமத்தில் ஒரு பதற்றமான சூழல் காணப்படுகிறது.