பொலிஸார் மீது கிளைமோர்த் தாக்குதல்! யாழில் பதற்றம்!!(படங்கள்)

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து ஒருவர் கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை 7.30 மணியளவில் இடம்பெற்றது.

“சம்பவம் இடம்பெற்ற இடத்தில் போல்ஸ்கள், வயறுகள் காணப்படுகின்றன. இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மணல் கடத்தலைக் கட்டுப்படுத்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழமையானது.

அதுபோன்றே இன்றும் சோதனை நடவடிக்கைக்கு தயாரான போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது” என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.



Previous Post Next Post